தமிழ்

இந்தப் பதிவிறக்கச் சேவையை உங்கள் சாதனம் ஆதரிக்கவில்லை என்றாலும், பதிவிறக்க தகவலைக் காண இதைப் பயன்படுத்தலாம். கணினியில் பதிவிறக்குவதற்காக பதிவிறக்கங்களுக்கான இணைப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படலாம்.

D7100 சாதனநிரல்

உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • Windows
  • Mac OS

இந்த மென்பொருள் புதுப்பிப்பு நிரல் என்பது மேலே பட்டியலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்-சொந்தமான சாதனத்திற்கு (“பாதிக்கப்பட்ட தயாரிப்பு”) ஆகும், மேலும் இது கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதன் மூலம் மட்டுமே வழங்கப்படும். “ஏற்றுக்கொள்கிறேன்” என்பதை தேர்ந்தெடுத்து “பதிவிறக்கு” என்பதை கிளிக் செய்வது ஒப்பந்தத்தில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. பதிவிறக்கத்தை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள் என்பதில் உறுதியாக இருக்கவும்.

  • • D7100 கேமராவின் “C” சாதனநிரலை 1.05 பதிப்புக்குப் புதுப்பிப்பதற்குப் பயன்படுத்துவதற்கான மென்பொருளை இந்தச் சேவை வழங்குகிறது. தொடர்வதற்கு முன்பு, கேமரா அமைவு மெனுவிலிருந்து சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, கேமராவின் சாதனநிரல் பதிப்பைச் சரிபார்க்கவும். மேலே பட்டியலிடப்பட்டுள்ள சாதனநிரல் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் இந்த புதுப்பிப்பை நீங்கள் பதிவிறக்கவோ அல்லது நிறுவவோ தேவையில்லை.
  • • இந்தப் புதுப்பிப்பில் முந்தைய புதுப்பிப்புகளில் செய்யப்பட்டுள்ள எல்லா மாற்றங்களும் அடங்கும்.
  • • தொடர்வதற்கு முன்பு கீழே இருக்கும் விபரத்தைப் படிக்கவும்.
“C” சாதனநிரல் பதிப்பு 1.04 -க்கும் 1.05 -க்கும் இடையேயான மாற்றங்கள்
  • • [தனிப்படுத்தல் அமைப்பு மெனு] என்பதில் தனிப்படுத்தல் அமைப்பு c4 [மானிட்டர் ஆஃப் தாமதம்] > [நேரலை காட்சி] என்பதற்கு [வரம்பு இல்லை] தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் Camera Control Pro 2 இல் தொடங்கப்பட்ட நேரலை காட்சி 10 நிமிடங்களில் முடிவடையும் சிக்கல் சரிசெய்யப்பட்டது.
முந்தைய பதிப்புகளிலிருந்து மாற்றங்கள்
“C” சாதனநிரல் பதிப்பு 1.03 -க்கும் 1.04 -க்கும் இடையேயான மாற்றங்கள்
  • • AF-P லென்ஸ்களுக்கு பின்வரும் ஆதரவுகள் சேர்க்கப்பட்டுள்ளன:
    • - குவியம் செய்த பிறகு இயக்க நிறுத்த டைமர் காலாவதியாகினால், டைமரை மீண்டும் செயல்படுத்தும் போது, குவிய இடநிலையானது மாற்றமடையாது.
    • - லென்ஸ் குவிதல் வளையத்தைச் சுழற்றி குவியம் சரிசெய்யப்பட்டால், முடிவிலி அல்லது குறைவான குவியம் தூரம் அடையப்படுவதைக் குறிப்பிட, காட்சிப்பிடிப்பில் (மற்றும் நேரலை காட்சியில், மானிட்டரில் குவிய மையம்) குவிதல் காட்டி இப்போது பிளாஷ் செய்யும்.
  • • பின்வரும் சிக்கல் சரிசெய்யப்பட்டுள்ளது:
    • - மின்னணுகாந்தம் சார்ந்து கட்டுப்படுத்தப்பட்ட துவாரம் உள்ள லென்ஸை (E வகை லென்ஸ்கள்) பயன்படுத்தி நேரலை காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், உகந்த கதிர்வீச்சளவு சிலவேளைகளில் கிடைக்காது.
“C” சாதனநிரல் பதிப்பு 1.02 -க்கும் 1.03 -க்கும் இடையேயான மாற்றங்கள்
  • • மூவிகளில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது குறைக்கப்பட்டுள்ளது.
  • Frame size/frame rate (ஃப்ரேம் அளவு/ஃப்ரேம் விகிதம்) என்பதற்கு 1280×720; 60p அல்லது 1280×720; 50p தேர்ந்தெடுக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டிருக்கும் மூவிகளில் இரைச்சல் (கிடைமட்டக் கோடுகள்) குறைக்கப்பட்டுள்ளது.
  • (பிளேபேக்) பொத்தானை அழுத்தி படிமங்களைப் பார்க்கும்போது சில நேரங்களில் திரையை இருளடையச் செய்த ஒரு சிக்கல் தீர்க்கப்பட்டது.
  • • சில மொழிகளுக்கான மெனுக்களில், தொடர்ந்து உருட்டும்போது கேமரா உறைந்து நின்றுவிடும் ஒரு சிக்கல் தீர்க்கப்பட்டது.
  • காட்சிப்பிடிப்பு மாய எல்லை விருப்பத்தைப் பயன்படுத்தி காண்பிக்கப்படும் மாய எல்லையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டன.
  • Clean image sensor (படிம சென்சாரை சுத்தப்படுத்து) விருப்பம் பயன்படுத்தப்படும்போது கேமரா உறைந்து நின்றுவிடும் சிக்கல் தீர்க்கப்பட்டது.
“C” சாதனநிரல் பதிப்பு 1.01 -க்கும் 1.02 -க்கும் இடையேயான மாற்றங்கள்
  • • கேமரா இப்போது தானியங்கு Distortion control data (உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவு) பதிப்பு “L” 2.000 மற்றும் பிந்தையதைப் பயன்படுத்துகிறது. தானியங்கு உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவு பதிப்பு “L” 2.000 மற்றும் பிந்தையதற்கு புதுப்பிக்கும் முன்னர் கேமராவின் சாதனநிரலைப் புதுப்பிக்கவும்.
“C” சாதனநிரல் பதிப்பு 1.00 -க்கும் 1.01 -க்கும் இடையேயான மாற்றங்கள்
  • கைமுறை அல்லது தொடர்ச்சியான பிளாஷ் விருப்பங்களைப் பயன்படுத்தி எடுக்கப்படும் ஃபோட்டோகிராஃப்களுக்கான ஃபோட்டோ தகவல் மேலோட்டப் பார்வையில் பிளாஷ் ஈடுகட்டலுக்கு பதிலாக பிளாஷ் நிலையைக் காண்பித்த ஒரு சிக்கல் தீர்க்கப்பட்டது.
  • • தேர்ந்தெடுப்புக்குரிய நிறச் சிறப்பு விளைவுக்கான நிறத் தேர்ந்தெடுப்பின்போது திரை பெரிதாக்கப்படுகையில் AE-L/AF-L பொத்தான் அழுத்தப்பட்டால் நேரலை காட்சி புதுப்பிக்கப்படுவதை நிறுத்திய ஒரு சிக்கல் தீர்க்கப்பட்டது.
  • • குறிப்பிட்ட செயல்பாடுகளைச் செய்யும்போது காட்சிப்பிடிப்பு மாய எல்லைத் திரை உறைந்து நின்றுபோகும் சிக்கல் தீர்க்கப்பட்டது.
  • WB தொடர்பிடிப்பு பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஃபோட்டோகிராஃப்களுக்கு மென்-டியூன் மொத்த மதிப்பு அதிகமாக இருக்கும்போதிலும், ஃபோட்டோ தகவல் திரை மென்-டியூன் மதிப்பாக "9" என்பதை காண்பிக்கும் ஒரு சிக்கல் தீர்க்கப்பட்டது.
  • • நாள்காட்டி பிளேபேக்கின்போது குறிப்பிட்ட செயல்பாடுகள் செய்யப்படும்போது சுட்டி உறைந்து நின்றுபோகும் சிக்கல் தீர்க்கப்பட்டது.
  • • நாள்காட்டி பிளேபேக் திரையில் ஒரு பகுதியின் எழுத்துரு அளவு மாற்றப்பட்டுள்ளது.
  • • ஃபோட்டோ Exif தரவானது அதற்குச் சமமான 35 மிமீ வடிவமைப்பில் குவிய நீளத்தைக் காண்பிக்கும் விதம் மாற்றப்பட்டுள்ளது.
  • • கதிர்வீச்சளவுப் பயன்முறை M -இல் 1920×1080; 24p என்னும் ஃபிரேம் அளவு மற்றும் விகிதத்தில் படம்பிடிக்கப்பட்ட மூவிகளின் மூடுதல் வேகத்தில் உள்ள மாற்றங்களை கதிர்வீச்சளவு பிரதிபலிக்காமல் இருந்த ஒரு சிக்கல் தீர்க்கப்பட்டது.
கேமராவின் சாதனநிரல் பதிப்பைப் பார்த்தல்
  1. கேமராவை ஆன் செய்யவும்.
  2. கேமராவின் சாதனநிரல் பதிப்பைக் காண்பிப்பதற்கு, கேமரா MENU பட்டனை அழுத்தி, அமைப்பு மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்வு செய்யவும்.
  3. கேமராவின் சாதனநிரல் பதிப்பைச் சரிபார்க்கவும்.
  4. கேமராவை ஆஃப் செய்யவும்.
தயாரிப்பு விளக்கம்
பெயர் D7100 “C” சாதனநிரல் பதிப்பு 1.05
ஆதரிக்கப்படும் கேமராக்கள் D7100
ஆதரிக்கப்படும் கேமரா சாதனநிரல் பதிப்புகள் “C” சாதனநிரல் பதிப்புகள் 1.00–1.04
கோப்புப் பெயர் F-D7100-V105W.exe
முறைமைத் தேவைகள்
  • Microsoft Windows 11
  • Microsoft Windows 10
  • Microsoft Windows 8.1
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டுடன் கூடிய கணினி தேவை.
பதிப்புரிமை Nikon Corporation
காப்பக வகை சுய-பிரித்தெடுத்தல்
மறுஉற்பத்தி அனுமதிக்கப்படாது
கேமராவின் சாதனநிரலைப் புதுப்பித்தல்
  1. கணினியின் வன் வட்டில் கோப்புறை ஒன்றை உருவாக்கி, விருப்பம் போல் பெயரிடவும்.
  2. செயல்முறை 1-இல் உருவாக்கிய கோப்புறையில் F-D7100-V105W.exe-ஐப் பதிவிறக்கவும்.
  3. பின்வரும் கோப்பை “D7100Update” என்று பெயரிடப்பட்ட ஒரு கோப்புறைக்கு பிரித்தெடுக்க F-D7100-V105W.exe -ஐ இயக்கவும்:
    • D7100_0105.bin (கேமரா சாதனநிரல்)
  4. ஒரு கார்டு துளை அல்லது கார்டு ரீடரைப் பயன்படுத்தி, கேமராவில் வடிவமைக்கப்பட்ட ஒரு மெமரி கார்டுக்கு “D7100_0105.bin” -ஐ நகலெடுக்கவும்.
  5. கேமராவில் துளை 1 -இல் மெமரி கார்டைச் செருகி, கேமராவை இயக்கவும்.
  6. அமைவு மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, சாதனநிரல் புதுப்பித்தலை முடிக்க ஆன்-திரை அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
  7. ஒருமுறை புதுப்பித்தல் முடிந்ததும், கேமராவை ஆஃப் செய்து மெமரி கார்டை அகற்றவும்.
  8. சாதனநிரல் புதிய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: புதுப்பித்தலை முடிப்பதற்கு தேவைப்படும் உபகரணம் பற்றிய கூடுதல் விரிவான அறிவுறுத்தல்கள் அல்லது விபரத்திற்கு, பின்வரும் pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்:
DSLR_Firmup_Win_En.pdf (PDF) (0.21 MB)

குறிப்பு: Nikon-அங்கீகரித்த சேவை பிரதிநிதி மூலமும் உங்களுக்கான புதுப்பித்தலை மேற்கொள்ளலாம்.

தயாரிப்பு விளக்கம்
பெயர் D7100 “C” சாதனநிரல் பதிப்பு 1.05
ஆதரிக்கப்படும் கேமராக்கள் D7100
ஆதரிக்கப்படும் கேமரா சாதனநிரல் பதிப்புகள் “C” சாதனநிரல் பதிப்புகள் 1.00–1.04
கோப்புப் பெயர் F-D7100-V105M.dmg
முறைமைத் தேவைகள்
  • macOS Monterey பதிப்பு 12
  • macOS Big Sur பதிப்பு 11
  • macOS Catalina பதிப்பு 10.15
  • macOS Mojave பதிப்பு 10.14
  • macOS High Sierra பதிப்பு 10.13
  • macOS Sierra பதிப்பு 10.12
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டுடன் கூடிய கணினி தேவை.
பதிப்புரிமை Nikon Corporation
காப்பக வகை சுய-பிரித்தெடுத்தல்
மறுஉற்பத்தி அனுமதிக்கப்படாது
கேமராவின் சாதனநிரலைப் புதுப்பித்தல்
  1. F-D7100-V105M.dmg-ஐப் பதிவிறக்கவும்.
  2. பின்வரும் கோப்பைக் கொண்டிருக்கும் “D7100Update” என்று பெயரிடப்பட்ட ஒரு கோப்புறையைக் கொண்டுள்ள ஒரு வட்டுப் படிமத்தை இணைப்பதற்கு F-D7100-V105M.dmg ஐகானை இரு-கிளிக் செய்யவும்:
    • D7100_0105.bin (கேமரா சாதனநிரல்)
  3. ஒரு கார்டு துளை அல்லது கார்டு ரீடரைப் பயன்படுத்தி, கேமராவில் வடிவமைக்கப்பட்ட ஒரு மெமரி கார்டுக்கு “D7100_0105.bin” -ஐ நகலெடுக்கவும்.
  4. கேமராவில் துளை 1 -இல் மெமரி கார்டைச் செருகி, கேமராவை இயக்கவும்.
  5. அமைவு மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, சாதனநிரல் புதுப்பித்தலை முடிக்க ஆன்-திரை அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
  6. ஒருமுறை புதுப்பித்தல் முடிந்ததும், கேமராவை ஆஃப் செய்து மெமரி கார்டை அகற்றவும்.
  7. சாதனநிரல் புதிய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: புதுப்பித்தலை முடிப்பதற்கு தேவைப்படும் உபகரணம் பற்றிய கூடுதல் விரிவான அறிவுறுத்தல்கள் அல்லது விபரத்திற்கு, பின்வரும் pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்:
DSLR_Firmup_Mac_En.pdf (PDF) (0.17 MB)

குறிப்பு: Nikon-அங்கீகரித்த சேவை பிரதிநிதி மூலமும் உங்களுக்கான புதுப்பித்தலை மேற்கொள்ளலாம்.

இறுதி பயனர் உரிமை ஒப்பந்தம்

இலவச Adobe® Reader® மென்பொருளைப் பயன்படுத்தி கோப்புகளைப் பார்க்கலாம்.
Adobe® Reader® ஐ பதிவிறக்கு.